2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மதுபானப் பாவனையில் மட்டக்களப்புக்கு மூன்றாமிடம்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மதுபானப் பாவனையில் முதலாவது இடத்திலிருந்த மட்டக்களப்பு மாவட்டம், தற்போது மூன்றாமிடத்துக்கு சென்றுள்ளது என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா தெரிவித்தார்.

சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்துக்கான வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கூட்டம், காத்தான்குடிப் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இன்னுமொரு மாவட்டத்தில் அதிகமான குடிப்பழக்கம் காணப்படுவதாலேயே மட்டக்களப்பு மாவட்டம் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது யாழ்ப்பாண மாவட்டம் இதில் முதலாமிடத்தில் சில புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாகக் கூறப்படுகின்றது' என்றார்.

'மதுபானப் பாவனைக்கு அடிமையானவர்களைத் திருத்தி எடுப்பதற்காக பல்வேறு வகையான வேலைத்திட்டங்களை சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது' எனவும் அவர் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X