Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா
காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்க முற்படுவது தவிர்க்கப்பட வேண்டுமென காணாமல் போனவர்களின் உறவுகளிடமிருந்து கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்க பொறிமுறைக்கான பொதுமக்களின் கருத்தறியும் அமர்வு நேற்றுச் சனிக்கிழமை மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் இடம்பெற்றது.
காணாமல் போனவர்களின் உறவுகள் சார்பாக கருத்தை முன்வைத்த ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் செங்கலடி கிராமத்தைச் சேர்ந்த அமலராஜ் அமலநாயகி, 'காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவதற்குப் பதிலாக காணாமல் போனவர்கள் என்ற சான்றிதழ் வழங்குவதற்கு அரசாங்கம் பல மாதங்களுக்கு முன்னர் தீர்மானம் எடுத்தும் அந்த சான்றிதழ் கூட இதுவரை எவருக்கும் கிடைக்கவில்லை.
அதில் கூட இன்னமும் இழுபறி நிலைதான் காணப்படுகின்றது. அந்த சான்றிதழ் விரைவாக வழங்கப்பட வேண்டும.;
காணாமல் போனவர்கள் தொடர்பாக ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள மரண சான்றிதழ்களில் மரணத்திற்கான காரணம் காணாமல் போனவர் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் காணாமல் போன ஒருவருக்கு எவ்வாறு மரண சான்றிதழ் வழங்க முடியும்?' என்ற வினாவையும் அவர் எழுப்பினார்.
யுத்தம் முடிவடைந்த கால கட்டத்திலே தனது கணவனும் காணாமல் போயிருப்பதாக அவர் கூறினார்.
அன்று தொடக்கம் தனது கணவனை தான் தேடி வருவதாகவும் தனது கணவன் காணாமல் போன சம்பவத்துடன் தொடர்யுடையவர்கள் பற்றிய தகவல்களை உரியவர்களிடம் சமர்ப்பித்தும் தனக்கு தீர்வும் கிடைக்கவில்லை.
யாரும் சுயமாக காணாமல் போகவில்லை. காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பதே சரியானது.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடமாகின்ற நிலையில் இதுவரையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த செயலணியிலும் தான் நம்பிக்கை வைக்கவில்லை உண்மைகளை கண்டறிவதற்கான விசாரனை சர்வதேச கண்காணிப்புடன் நடை பெறலாம். அதில் உள்நாட்டிலும் சர்வதேச நாடுகளிலுமுள்ள தமிழர்களும் இடம்பெற வேண்டும்' என்றார்.
5 minute ago
20 minute ago
23 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
23 minute ago
38 minute ago