Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு, வாகரைப்; பிரதேச செயலகப் பிரிவில் கட்டுமுறிவு, மதுரங்கேணி, கிரிமிச்சை குளங்கள் மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களின் உதவியுடன்; இம்முறை 22,364 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்போகச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம், வாகரைப் பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்றது.
பெரும்போகச் செய்கைக்கான வேலையை இம்மாதம் 25ஆம் திகதி ஆரம்பிக்க வேண்டும் என்பதுடன், விதைப்பு வேலையை ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி முதல் நவம்பர் மாதத்தின் முதல் வாரம்வரை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
விவசாய அமைப்புகளின் திட்ட முகாமைத்துவக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய முக்கியமாக விவசாயிகள் கால அட்டவணையை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
கதிரவெளி, புச்சானக்கேணி, வம்மிவட்டவான், அம்மந்தனாவெளி ஆகிய பிரதேசங்களிலுள்ள மாடுகளை சீனிச்சாவடி பிரதேசத்துக்கும் பனிச்சங்கேணி, மதுரங்குளம் ஆகிய பிரதேசங்களிலுள்ள மாடுகளை வாகையடியோடைக்கும் வாகரை மத்தி, ஊpயன்கட்டு பிரதேசங்களிலுள்ள மாடுகளை கறுவாப்போடி பிரதேசத்துக்கும் குஞ்சங்குளம், வட்டவான், காயான்கேணி, வாகரை கிழக்கு, வாகரை தென்கிழக்கு, வாகரை தெற்கு ஆகிய பிரதேசங்களிலுள்ள மாடுகளை நாகம்பூமலைக்கும் கட்டுமுறிவு பிரதேசத்திலுள்ள மாடுகளை கருங்காலிச்சோலை, களனியமடு ஆகிய பிரதேசங்களுக்கு கொண்டு செல்வதற்கு முடிவு செய்யப்பட்டது.

17 minute ago
18 minute ago
38 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
18 minute ago
38 minute ago
3 hours ago