2025 மே 26, திங்கட்கிழமை

வேட்பாளர்களைத் தெரிவுசெய்ய த.ஐ.சு.மு நடவடிக்கை

Suganthini Ratnam   / 2017 மே 08 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியானது, எதிர்வரும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக சிறந்த வேட்பாளர்களைத் தெரிவு செய்யவுள்ளது என அம்முன்னணியின் செயலாளர் வி.கமலதாஸ் தெரிவித்தார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்திய குழுக் கூட்டம், மட்டக்களப்பிலுள்ள அதன் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (7)  நடைபெற்றபோதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தலைமையில் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்றது.

எதிர்வரும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களில் தனித்து அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்து  போட்டியிடுவதா என்பது பற்றியும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டதுடன், அது தொடர்பாக மேலும்; ஆலோசிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மக்களுக்கு சிறந்த சேவையாற்றுபவர்கள்,  மக்களுடன் நெருங்கிப் பழகுகின்றவர்கள், கல்வியாளர்கள் போன்றோரை வேட்பாளர்களாத் தெரிவு செய்வதற்கு இக்கூட்டத்தில்; தீர்மானிக்கப்பட்டது எனவும் அவர் கூறினார்.  

மேலும், கல்குடாவில் அமைக்கப்படும் எத்தனோல் மதுபான உற்பத்திச்சாலை விவகாரம் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது எனவும் அவர் கூறினார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X