2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'வைத்தியசாலையின் குறைபாடுகள் தீர்க்கப்படும்'

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் குறைகளை எதிர்காலத்தில் தீர்;த்துவைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் வேண்டுகோளுக்கமைய கிழக்கு மாகாண முதலமைச்சர் நேற்று வியாழக்கிழமை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபிருடன் கேட்டறிந்துகொண்டார்.

இங்கு தெரிவித்த முதலமைச்சர் மிக விரைவில் இதற்கான தீர்வை பெற்றுத் தருவதாகக் கூறினார். நிலவுகின்ற குறைபாடுகளையும் ஆளணிப் பற்றாக்குறையையும் எழுத்து மூலம் தனக்கு உடனடியாக வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X