2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்துகளை தடுக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

வீதி விபத்துகளை தடுக்கும் வகையில் மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதான வீதியில் அடையாளம் காணப்பட்ட 04 இடங்களான நான்குமூலைச் சந்தி, குட்வின் சந்தி,  மெத்தைப்பள்ளிச் சந்தி, டெலிகொம் சந்தி ஆகிய சந்திகளில்; வேகத்தடுப்புகளை அமுல்படுத் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிரதான வீதிக்கு வருகின்ற வீதிகளில் நிறுத்தல் கோடுகளை அமைப்பது சம்மந்தமாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் இன்று வியாழக்கிழமை பார்வையிட்டனர்.

இவ்வீதியில் வேகத்தடுப்பு கடவை கோடுகள் இட வேண்டிய இடங்கள் அடையாளம் காணப்பட்டதுடன், நாளை வெள்ளிக்கிழமை இதற்கான வேலை ஆரம்பிக்கப்படுமென மாகாண பணிப்பாளர் ஆர்.தர்மரட்ணம் தெரிவித்தார்.
குட்வின் சந்தியில் சமிக்ஞை விளக்குகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X