Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதான வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பயனின்றி இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதியகாத்தான்குடி -3, பைஷல் வீதியைச் சேர்ந்த முஹம்மது பாறூக் முஹம்மது பயாஸ் (வயது 19) என்பவரே உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடியில் பாதணிகள் தயாரிப்புத் தொழிலகத்தில் தனது இரவு நேரக் கடமையை முடித்துவிட்டு வெளியேறிய இவர், மட்டக்களப்புக்கு வந்து மீண்டும் காத்தான்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில்; அதிவேகமாகச் செல்லும்போது இவர் பயணித்த மோட்டார் சைக்கிள், கல்லடியிலுள்ள மணிக்கூட்டுக் கோபுர வளைவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவில் மின்விளக்குக் கம்பங்களுக்கு முன்னாலும் பின்னாலும் நிறுவப்பட்டிருந்த பாதுகாப்பு இரும்புக் கம்பியில் மோதியது.
இதில் இவரது தலை பலமாக அடிபட்டு அவ்விடத்திலேயே இரத்தம் பீறிட்ட நிலையில் மயக்கமடைந்துள்ளார்.
வீதியால் பயணித்தவர்கள் இது பற்றி காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்ததும் பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து விபத்தில் சிக்கிய இளைஞனை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.
இவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளில் 'சாரதிப் பயிலுநர் - லேர்னர்ஸ்' என்ற குறிப்புத் தகடு மாட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
இச்சம்பவம் குறித்து காத்தான்குடிப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
16 minute ago
17 minute ago
37 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
17 minute ago
37 minute ago
3 hours ago