2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'வட்டியையும் வறுமையையும் ஒழிக்க வேண்டும்'

Niroshini   / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வட்டியென்பது நெருப்பாகும். அதன் பக்கம் போகக் கூடாது என மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.பி.முகைதீன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும் ஆப்பள்ளிவாயலில் நேற்று  வெள்ளிக்கிழமை, ஜும் ஆத்தொழுகையின் பின்னர் ஸலாமா வட்டியில்லா கடன் வழங்கும் நலன்புரி அமைப்பின் அலுவவலகத்தினை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும் ஆப்பள்ளிவாசலின் இடைக்கால நிர்வாக சபையின் ஏற்பாட்டில் வட்டியில்லா  கடன் வழங்கும் நலன்புரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதி முகைதீன்,

வட்டியையும் வறுமையையும் சமூகத்தில் ஒழிக்க வேண்டும். சமூகத்தில் இன்று வட்டி ஒரு பாரிய கொடுமையாக மாறியிருக்கின்றது.

வட்டியை ஒழிக்க அனைவரும் பாடுபட வேண்டும். இன்று வட்டியினால் உயிரிழிப்புக்களும், சொத்திழப்புக்களும் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான வட்டியில்லா கடன் வழங்கும் நலன்புரி அமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு அதில் தனவந்தர்களின் உதவியைப் பெற்று, கடன் தேவையான மக்களுக்கு வட்டியில்லா கடனை வழங்க வேண்டும்.

வட்டியில்லாக் கடனை வழங்கும் வேலைத்திட்டத்தினை இவ்வாறான பள்ளிவாயல்கள் மேற்கொள்ள வேண்டும். வட்டியில்லா வேலைத்திட்டத்தின் மூலம் சமூகத்தை வட்டியிலிருந்து பாதுகாக்க முடியும்.

இஸ்லாமியப் பார்வையில் வட்டியென்பது நெருப்பாகும். அதன் பக்கம் போகக் கூடாது. அவ்வாறு அதன் பக்கம் போனால் அது சுட்டெரித்து விடும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X