2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

20 வருடக் காலப்பகுதியில் மட்டு. தேசியக் கல்வியியல் கல்லூரியிலிருந்து 2,600 ஆசிரிய மாணவர்கள் வெளியேற்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கடந்த 20 வருடக் காலப்பகுதியில் மட்டக்களப்பு தேசியக் கல்வியியல் கல்லூரியிலிருந்து 2,600 ஆசிரிய மாணவர்கள் தங்களின் கற்கையைப்; பூர்த்தி செய்துகொண்டு வெளியேறியுள்ளதாக அக்கல்லூரியின் பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன், இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

1996ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரை காலப்பகுதியிலேயே மேற்படி ஆசிரிய மாணவர்கள் தங்களின் கற்கையைப் பூர்த்திசெய்துள்ளனர். இக்கல்லூரியிலிருந்து வருடம் ஒன்றுக்கு 130 ஆசிரிய மாணவர்கள்; கற்கையை பூர்த்திசெய்து வெளியேறுகின்றனர்.

கணிதம், விஞ்ஞானம், நாடகமும் அரங்கியலும், சித்திரம், ஆரம்பப் பாடநெறி ஆகிய பாடங்களைக் கற்று இவர்கள் ஆசியர்களாக கடமையாற்றுகின்றனர். இக்கல்லூரியில் இந்த வருடம்  ஆரம்பிக்கப்பட்ட உடற்கல்விப் பாடத்;தைக் கற்பதற்காக 50 ஆசிரிய மாணவர்கள் இணைந்துள்ளனர்.

தற்போது இக்கல்லூரியில் 202 ஆசிரிய மாணவர்கள் உள்ளனர். அடுத்த வருடம் மேலும் 235 புதிய ஆசிரிய மாணவர்கள் இணைவார்கள். இந்நிலையில், இக்கல்லூரியில் ஆசிரிய மாணவர்களின் எண்ணிக்கை 437 ஆக அதிகரிக்கும் எனவும் அவர் கூறினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X