2025 மே 06, செவ்வாய்க்கிழமை

1,000 மாணவர்கள் ஒரே மேடையில் கௌரவிப்பு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2020 மார்ச் 09 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்டத்தில், ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 1,000 மாணவர்கள், ஒரே மேடையில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்திச் சபை ஏற்பாடு செய்த இக்கௌரவிப்பு விழா, காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில், சபையின் தலைவர் தேசமான்ய ஏ.எல்.மீராசாஹீபு தலைமையில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு, பட்டிருப்பு, மட்டக்களப்பு மத்தி, கல்குடா, மட்டக்களப்பு மேற்கு ஆகிய ஐந்து  கல்வி வலயங்களிலிருந்து  113 பாடசாலைகளுடாகத் தெரிவுசெய்யப்பட்ட 1,000 மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

சாதனைகள் படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் மேற்படி பாராட்டு நிகழ்வில் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X