2025 மே 13, செவ்வாய்க்கிழமை

10 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வைபவம்

Editorial   / 2019 மார்ச் 25 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், க.விஜயரெத்தினம், ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

நாடளாவியரீதியில் 10 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வைபவம், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர்  மா.உதயகுமார் தலைமையில், மட்டக்களப்பு - வெபர் விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் (23) நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வைபவ ரீதியாகக் காணி உறுதிப்பத்திரங்கள், காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கிவைத்தார்.

இவ்வைபவத்தில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர்களையும் சேர்ந்த மக்களுக்கு 6,109 காணி அனுமதிப்பத்திரங்களும் 1,097 காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக, இராஜாங்க அமைச்சர்களான அலிஸாஹிர் மௌலானா, எம்.எஸ்.எஸ் அமீர் அலி, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X