2025 மே 03, சனிக்கிழமை

100 போதை மாத்திரைகளுடன் கைதான இளைஞர்கள் இருவருக்கும் விளக்கமறியல்

Editorial   / 2020 மே 07 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆா்.ஜெயஸ்ரீராம்

வாழைச்சேனை பிரதேசத்தில் போதை தரும் 100 மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களையும், இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்படி இளைஞர்கள் இருவரும், வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றையடுத்து, வாழைச்சேனை,  மாஞ்சோலை கிராமங்களில் வைத்து விசேட அதிரடிப்படையினரால், நேற்று முன்தினம் (06) கைதுசெய்யப்பட்டு, தம்மிடம் ஒப்படைக்கப்பட்டனரென, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

இவர்கள், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, நீண்ட காலமாக போதை மாத்திரைகள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்றும் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X