2025 மே 05, திங்கட்கிழமை

111 பேருக்கான அன்டிஜன்; இருவருக்கு தொற்று

A.K.M. Ramzy   / 2021 மே 17 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.எம்.அஹமட் அனாம்

 பயணத்தடை அமுலிலுள்ள நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேலெழுவாரியாக 111 நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்ட நிலையிலும், நாட்டில்  பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையிலும் மேலெழுவாரியாக ஓட்டமாவடி பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

  பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையில் கொரோனா சட்டத்தினை மதிக்காது மற்றும் முகக் கசவம் அணியாது வீதிகளில் பயணம் செய்தோர்  மற்றும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் உறவினர்கள் என 111 பேருக்கு மேலெழுவாரியாக அன்டிஜன் பரிசோதனை பெறப்பட்டது. நிலையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X