Freelancer / 2021 ஜூலை 04 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 43 வயதுடைய ஆண் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று (03) உத்தரவிட்டார்.
குறித்த சிறுமியின் தந்தையார் அவர்களை விட்டு பிரிந்து சென்ற நிலையில் தாயாருடன் வாழ்ந்து வந்துள்ளார். சிறுமியின் தாயார் வேலைக்கு சென்ற நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அருகாமையிலுள்ள இரு திருமணங்கள் முடித்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடையவர் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிறுமியின் பெரியதாயார் பொலிசாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து பொலிசார் கடந்த வெள்ளிக்கிழமை (2) குறித்த நபரை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் நேற்று (03) ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
M
7 minute ago
27 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
27 minute ago
30 minute ago