Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
“அனைவருக்கும் 13 வருட உயர்கல்வித் திட்டம்” எனும் புதிய கொள்கை மாணவ சமுதாயத்தின் நம்பிக்கையுடனான எதிர்காலத்துக்கு வழிவகுக்குமென, காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். பதூர்தீன் தெரிவித்தார்.
அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வியை வழங்கும் புதிய திட்டம், மட்டக்களபபு மத்தி கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி தேசியக் கல்லூரியில் (மத்திய மகா வித்தியாலயம்) நேற்று (2) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அங்கு கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,
“மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி தேசியக் கல்லூரிம், பட்டிருப்பு மகா வித்தியாலயமும் இந்த 13 வருட உத்தரவாதக் கல்வித் திட்டத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த இரு பாடசாலைகளிலும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எந்த சமூகத்து மாணவர்களும் இணைந்து தமது கல்வியைத் தொடர முடியும்.
“காத்தான்குடி தேசியக் கல்லூரியில் 147 பேருக்கு அனுமதி உண்டு. தற்போது வரை 28 பேர் இணைந்து கொண்டுள்ளார்கள்.
“இங்கு கல்வியை வழங்குவதற்கென 5 வல்லுநர்கள், அதிபர் ஆகியயோர் பயிற்றுவிக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, மேலதிக தொழில் வல்லுநர்கள் வெளியிலிருந்து அழைக்கப்பட்டுள்ளார்கள்.
“மாணவர்கள் தாம் போதியளவு சித்தி பெறவில்லை என்ற எந்தவித மனச் சோர்வும் அடையாமல் தன்னம்பிக்கையுடன் சக மாணவர்களின் பாடசாலைக் கல்வி உணர்வுடனேயே தங்களது வாழ்க்கைத் தொழிற் திறன் கல்வியைத் திருப்தியாக நிறைவு செய்து கொள்ள முடியும்
“மாணவர்களை பாடசாலையில் இருந்தவாறே தொழில்வாய்ப்பு உலகுக்குத் தயார்படுத்தி அனுப்புவதே தற்போதைய அரசாங்கக் கல்வித் திட்டத்தின் நோக்கம்.
“எனவே, இந்த அரிய வாய்ப்பை மாணவர்களும் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேவேளை பெற்றோரும் பாதுகாவலர்களும் இத்தகைய போதியளவு தேர்ச்சிகளைப் பெறாத மாணவர்களுக்கு ஊக்கமும் ஒத்தாசையும் அளித்து அவர்களை வீட்டுக்கும் நாட்டுக்கும் வளம் சேர்க்கும் வல்லுநர்களாக மாற்ற முயற்சிக்க வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
24 minute ago
25 minute ago
34 minute ago