2025 மே 02, வெள்ளிக்கிழமை

141 பொலிஸார் தனிமைப்படுத்தல்

Editorial   / 2020 மே 25 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று திரும்பிய மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றி வரும் 141 பொலிஸாரை, கல்லடி பொலிஸ் பயிற்சி முகாமில் தனிமைப்படுத்தியுள்ளதாக, பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர், இன்று (25) தெரிவித்தார்.  

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிவரும் பொலிஸ்  உயர் அதிகாரி தொடக்கம் சாதாரன பொலிஸ் உத்தியோகத்தர் வரையில் தமது விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று மீண்டும் கடமைக்குத் திரும்பிய நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் கீழ், அவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, கல்லடியிலுள்ள பொலிஸ் பயிற்சி முகாமில் 141 பொலிஸார், 07 நாள்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என, அதிகாரி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X