2025 மே 12, திங்கட்கிழமை

15 நாள்களாக தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு

Editorial   / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை வயல் பகுதியிலிருந்து நேற்று (07) சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் - மயிலங்கரைச்சை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய சீனித்தம்பி யோகராசா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர், 15 நாள்களுக்கு முன்னர் வீட்டை விட்டுச் சென்றதாகவும், அவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் குடும்பத்தினர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X