2025 மே 13, செவ்வாய்க்கிழமை

155ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் மட்டக்களப்பிலும் அனுஷ்டிப்பு

Editorial   / 2019 மார்ச் 21 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 155ஆவது பொலிஸ் வீரர்கள் தினம், நாடளாவிய ரீதியில் இன்று (21) அனுஷ்டிக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தின் பிரதான நிகழ்வு, மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ் அதிபர் நுவான் வெதசிங்க தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திலுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத் தூபியருகில், இன்று காலை நடைபெற்றது.

இதன்போது, பொலிஸ் கொடியேற்றப்பட்டு இடம்பெற்ற பொலிஸ் அணிவகுப்பு மரியாதையைத் தொடர்ந்து, உயிர்நீர்த்தவர்களுக்கான மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, நினைவுத் தூபியில் மலரஞ்சலி சாத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டங்களின் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்கள், மதத் தலைவர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், உயிர்நீர்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X