2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

‘16 பேரில் ஒருவர்கூட கிழக்கில் இல்லை’

Princiya Dixci   / 2021 ஜூன் 27 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலைசெய்யப்பட்ட 16 தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர்கூட கிழக்கைச் சேர்ந்தவர் இல்லை என்பது கவலைக்குரிய விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

1978ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் ஒரு ஜனநாயக விரோத செயற்பாடாகும். அச்சட்டத்தை முழுமையாக நீக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இத்தடைச்சட்டத்தை நீக்கி நாட்டில் நிரந்தர அரசியல்தீர்வை கொண்டுவாருங்கள்.அப்போது நாட்டில் குழப்பமும் வராது போராட்டமும் இருக்காது.

“ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை நிறுத்தப்படுமென்ற அழுத்தமே இன்று தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவைத்திருக்கின்றது. எனினும், விடுதலை செய்யப்பட்ட 16 பேரில் ஒருவர்கூட கிழக்கைச் சேர்ந்தவர் இல்லை.

“அண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சம்பவத்தில் மட்டக்களப்பு கிரானைச் சேர்ந்த 10 பேர் கைதுசெய்யப்பட்டு, இதே சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

“அதேபோல் பேஸ்புக்கில் தவறாகப் பதிவிட்டார்கள் என்றபெயரிலும் பலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களெல்லாம் விடுதலை செய்யப்படவேண்டும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X