2025 மே 02, வெள்ளிக்கிழமை

2 கோடி ரூபா நிதியில் இறைச்சி வெட்டும் நவீன மடுவம்

Kogilavani   / 2014 ஜூலை 10 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி நகரசபை பிரிவில் இரண்டு கோடி ரூபா நிதியுதவியுடன் இறைச்சி வெட்டும் மடுவம் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

காத்தான்குடி நகரசபையினால் விசேடமாக கொள்வனவு செய்யப்பட்ட காணியில் இந்த மடுவம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டலில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஒரு கோடி ரூபா நிதி மற்றும் காத்தான்குடி நகரசபையின் ஒரு கோடி ரூபா நிதி உட்பட இரண்டு கோடி ரூபா நிதியுதவியுடன் இது நிர்மாணிக்கப்படுகின்றது.

இந்த மடுவத்தில் ஆடு மற்றும் கோழி என்பனவும் வெட்ட முடியும் என்றும்  அத்துடன் நவீன முறையில் கழிவுகளை அகற்றுவதற்கும் விசேட பகுதிகளும் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

இந்த மடுவத்தின் நிர்மாணப் பணிகள் முடிவடையும் வரைக்கும் அதற்கு அருகில் தற்காலிகமாக மடுவம் ஒன்று காத்தான்குடி நகர சபையினால் நிர்மாணிக்கப்பட்டு அதிலேயே இறைச்சிகள் வெட்டப்படுவதாக காத்தான்குடி நகர சபைதலைவர் எஸ்.எச்.அஷ்பர் தெரிவித்தார்.

இம்மடுவத்தின் நிர்மாணப் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருவதாகவும் நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மேலும் குறிப்பிட்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X