2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

20 வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை

Kogilavani   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள முத்திரையிடப்படாத நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளை பயன்படுத்திய 20 வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நத்தார் பண்டிகையையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின்போதே இவ்வாறு மேற்படி வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக மட்டக்களப்பு நகரம், காத்தான்குடி, ஏறாவூர் நகரம் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 55  வர்த்தக நிலையங்களில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, நிறைகுறைந்த பாண் விற்பனை, பிழையான நிறுத்தல் அளத்தல் கருவிகளை பாவித்து வியாபாரம் செய்தமை, முத்திரையிடப்படாத கருவிகளை பாவித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் மேற்படி வர்த்தகர்களுக்கு எதிராக சாட்டப்பட்டுள்ளன.

மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கு அமைய இச்சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .