2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

20 முதியோருக்கு மதிய உணவு வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு, கல்லடி விபுலானந்தர் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள 20 முதியோருக்கு மதிய உணவும், சுமார்  500 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய பொருட்களடங்கிய பொதிகளும் திங்கட்கிழமை(18) வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும்; தற்போதைய மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிறந்த தினத்தையொட்டி இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவின் ஏற்பாட்டில் சங்கத் தலைவர் ஏ.பகீரதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பி.பிரசாந்தன உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு பொருட்களை  வழங்கி வைத்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X