2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

2009ஆம் ஆண்டிற்கு பின்னர் வெளியான பட்டதரிகளுக்கும் விரைவில் நியமனம்: சுதந்திர பட்டதாரி சங்கம்

Kogilavani   / 2012 ஜூன் 11 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடனும் ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கம் நடத்திய பேச்சு வார்த்தைகளையடுத்து 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் வெளியான பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படாது என்ற நடைமுறை மாற்றப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்க தேசிய செயலாளர் மனுல பெரேரா தெரிவித்தார்.

கல்குடா ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளை நேற்று முன்தினம் சனிக்கிழமை சந்தித்து பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார். கல்குடா தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதரிகள் சங்க தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி  கல்குடா பிரதம அமைப்பாளருமான டி.எம்.சந்திரபால தலைமையில் வந்தாறுமூலை சுதந்திரகட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதரிகள் சங்க பிரதிநிதிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

புதிய நடைமுறையின் கீழ் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் வெளியான பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .