Suganthini Ratnam / 2011 மார்ச் 23 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு, வாழைச்சேனை இலங்கை மின்சார காரியாலய வளவினுள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பாரிய குழியொன்றில் நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதுடன், நுளம்புப் பெருக்கம் அதிகரித்து காணப்படுவதாகவும் அப்பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வாழைச்சேனை சுகாதார அலுவலக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தபோதிலும், எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லையென அம்மக்கள் குறிப்பிட்டனர்.
இது தொடர்பில் வாழைச்சேனை இலங்கை மின்சாரசபை மின் அத்தியட்சகர் என்.சோதிராஜாவிடம் கேட்டபோது, இக்குழியை மூடுவதற்கு அதிகளவில் பணம் தேவைப்படுகிறது. இதற்கான அனுமதி பெறுவதற்கு தலைமை காரியாலயத்திற்கு அறிக்கைகள் தயாரித்து அனுப்பியுள்ளோம். இதற்கான பதிலுக்காக காத்திருக்கிறோம்.
இந்நிலையில், பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் நுளம்புப் பெருக்கத்தை கட்டுப்படுத்த மருந்து தெளித்தல், புகையூட்டல் செயற்பாடுகளை மேற்கொண்டு தருமாறு சுகாதாரப் பகுதியினரை கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .