2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கட்டாருக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 15 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (எம்.சுக்ரி)

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கட்டார் நாட்டிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை சனிக்கிழமை செல்லவுள்ளார்.

மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு கட்டார் செல்லவுள்ள எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கட்டார் நாட்டின் சமூகசேவைகள் மகளிர் விவகாரங்கள் மற்றும் தொழிற்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நாசர் பின் அப்துல்லா அல் மொனிதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அத்துடன், கட்டார் அகடமியின் உள்நாட்டு, வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில் விசேட உரையாற்றவுள்ளார்.

விதவைகளுக்கான மறுவாழ்வு, மாணவர்களுக்கான தொழிநுட்ப அறிவை முன்னேற்றுதல் போன்ற பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் பிரதியமைச்சரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .