Menaka Mookandi / 2011 ஏப்ரல் 17 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படுமென கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் உப வேந்தர் கலாநிதி பிரேம்குமார் தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்கும் மாணவர்கள் நாளை திங்கட்கிழமை விடுதிக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் செவ்வாய்க்கிழமை அனைத்து வகுப்புக்களும் ஆரம்பிக்கப்படுமெனவும் பதில் உப வேந்தர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள பாதுகாப்பு காவலரன் அகற்றப்பட்டு பொலிஸார் அங்கிருந்து செல்ல வேண்டும் எனக்கூறி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி நடத்திய ஆர்ப்பாட்டத்தையடுத்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டு மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
20 minute ago
31 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
31 minute ago
45 minute ago
1 hours ago