Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 19 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்வதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
அத்துடன், இவர்களை எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர் ஒன்றியத் தலைவர் ஜி.கிருஷ்ணகாந் மட்டக்களப்பு பொலிஸாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். செயலாளர் ரி.மதிராஜ் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
கடந்த 30ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சர்ச்சையால் மாணவர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்திலுள்ள பொலிஸாரை அகற்றுமாறு கோரி நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையடுத்து பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டது.
இன்றையதினம் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் படவுள்ள நிலையில் மாணவர் ஒன்றியத் தலைவர் ஜி.கிருஷ்ணகாந் கையொப்பமிட்டு ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கை ஊடாக மாணவர் ஒன்றியம் அறிவிக்கும் வரை விரிவுரைகளுக்கு சமூகமளிக்க வேண்டாமெனக் கூறியிருந்தார்.
இது தொடர்பாக பொலிஸாருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு மாணவர்களை சமுகமளிக்க வேண்டாமென பத்திரிகைகளில் தெரிவித்ததுடன் மாணவர்கள் மத்தியில் குழப்ப நிலையினை ஏற்படுத்தி அமைதிக்கு பங்கம் விளைவிக்கலாம் என்பதாலேயே அவர்களை கைதுசெய்ததாகவும் தெரிவித்தனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago