Menaka Mookandi / 2011 ஏப்ரல் 19 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கட்டார் நாட்டுக்கு சென்றுள்ள சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கட்டார் பவுண்டேஸன் நிறுவனத்தின் பிரதி தலைவர் டாக்டர் செயிப் அலி ஹஜ்ரியை அதன் தலைமையலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது இலங்கையிலுள்ள வறிய மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவது தொடர்பாகவும், கட்டார் பல்கலைக்கழகத்தில் இலங்கை மாணவர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கையிலுள்ள வசதிகுறைந்தவர்களுக்கும் மற்றும் கண் பார்வையிழந்தோருக்கும் விஷேட தொழில் உபகரணங்களை வழங்க இச்சந்திப்பில் இணக்கம் காணப்பட்டதாகவும் இதற்காக கட்டார் பவுண்டேஸன் பிரதி தலைவரை இலங்கைக்கு வருமாறும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா அழைப்பு விடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
.jpg)
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago