Super User / 2011 ஏப்ரல் 20 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு வவுணதீவு நாமகள் மகா வித்தியால உயர்தர வகுப்பு மாணவன் இன்று மாலை கதிர்காமத்தில் நீரில் மூழ்கி மரணமானதாக பாடசாலை அதிபர் ரி.கோபாலபிள்ளை தெரிவித்தார்.
குறித்த பாடசாலையிலிருந்து 96 மாணவர்களும் அதிபர் உட்பட நான்கு ஆசிரியர்களும் நான்கு நாள் கல்விச்சுற்றுலாவை மேற்கொண்டு இன்று காலை பயணத்தை ஆரம்பித்தனர். இவர்கள் இன்று மாலை செல்லக்கதிர்காமம் வாவியில் குளித்துக்கொண்டிருந்தபோது நான்கு மாணவர்கள் நீரினால் அடித்துச்செல்லப்பட்டனர். இவர்களில் மூவர் காப்பாற்றப்பட்டபோதிலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அதிபர் தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.
நீரினால் அடித்துச்செல்லப்பட்;ட மாணவன் இம்முறை க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றும் சபாரத்தினம் யுகன் எனவும் அதிபர் தெரிவித்தார்.
குறித்த மாணவனின் சடலத்தை மீட்பதற்கான முயற்சிகளில் கதிர்காமம் பொலஸார் ஈடுபட்டுள்ளதாகவும் கல்விச்சுற்றுலாவை இடைநிறுத்திவிட்டு மீண்டும் மட்டக்களப்பு திரும்புவதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago