2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

அரச காணியில் சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டியவர்கள் கைது

Super User   / 2011 மே 01 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா, அனுருத்தன்)

வாகரை பொலிஸ் பிரிவில் சல்லித்தீவு பிரதேசத்தில் அரச காணியில் சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆறு பேர் நேற்று  சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் வெட்டப்பட்ட மரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக  வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரீ.ஜயஸீலன் தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பிரதேசத்திற்கு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஏ.எம்.றம்ஸான் தலைமையில் சென்ற குழுவினரே சந்தேக நபர்களையும் மரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

முதுரை, தேக்கை, வேப்பை, வேளன் போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் இதனுடன் சம்மந்தப்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு நேற்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது ஒவ்வொருவரும் தலா ஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் இவர்களுக்கான விசாரனை எதிர்வரும் மே 11ஆம் திகதி நடைபெறவுள்ளதாக வாகரை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஏ.எம்.றம்ஸான் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .