Super User / 2011 மே 15 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
அண்மையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் வகையில் கொலைகளுக்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் அரசு விரைவாக நிறுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடியில் மதுபானசாலை உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
களுவாஞ்சிக்குடியில் இளம் வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளமையானது மட்டக்களப்பு மாவட்ட மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு கிழக்கில் சமாதானம் நிலவுகிற வேளையில் இவ்வாறான கொலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
மட்டு. நகரில் ஆலய பரிபாலன சபை செயலாளர் சுடப்பட்டு இரண்டு தினங்களுக்கு பின்னர் இக்கொலை நடைபெற்றுள்ளது.
இச்சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தவே வழிவகுக்கும்.
எனவே அரசாங்கம் இது போன்ற கொலைகள் இனிமேல் நடைபெறாமலிருக்க ஆவணம் செய்தல் வேண்டும்.
இவ்வாறான சம்பவங்கள் மேலும் தொடருமானால் அமைதியற்ற சூழல் ஒன்று உருவாகக்கூடிய சாத்தியங்கள் உள்ளன.
இதேவேளை, இரு கொலைகள் நடைபெற்றதைத் தொடரந்து மட்டக்களப்பில் வீதி சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய வீதிகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் சோதனை செய்வதுடன் பதிவுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
14 minute ago
32 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
32 minute ago
2 hours ago
2 hours ago