Super User / 2012 மார்ச் 18 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி, ஜிப்ரான்)
உணர்ச்சி வசனங்களை பேசி தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வீடுகளுக்கு வருபவர்களுக்கு உங்கள் வீடுகளிலுள்ள விளக்குமாறை காட்டி விரட்டியடிக்க வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
சுமார் 2,000க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்த்தர்களை கொலை செய்த விடுதலை புலி இயக்க ஆதரவாளர்கள் தான் இன்று ஜெனீவாவில் மனித உரிமை பற்றி பேசுகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண சபை தேர்லில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி பிரமானம் செய்வதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு வந்த சிவனேசதுரை சந்திரகாந்தனை தற்கொலை குண்டு தாக்குதலை நடாத்த முயற்சித்வர்கள் தான் இன்று ஜெனீவாவில் மனித உரிமைகள் பற்றி பேசுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு சிவானாந்த தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடந்து உரையாற்றிய அவர்,
"கிழக்கு மாகாணத்தில் சுமார் 209 புத்திஜீவிகளையும் 2000க்கு மேற்பட்ட கல்விமான்கள் மற்றும் முக்கியஸ்த்தர்களை இழந்த பின்னர் தான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு உள்ளூராட்சி மற்றும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றியீட்டியது
இவ்வாறு ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி விகிதாசார தேர்தல் முறையில் அமோக வெற்றியீட்டிய கட்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தான் என்பதை நான் கூறிவைக்க விரும்புகின்றேன்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமிக்கப்பட்டதையடுத்து, ஆயுத குழுவை சேர்ந்தவர் கிழக்கு மாகண முதலமைச்சர்; என கூறி ஐரோப்பிய நாடுகள் உதவி வழங்க மறுத்தது.
இதன்போது ஜனாதிபதி கிழக்கின் உதயம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் உதவிகளை வழங்கி கிழக்கு மாகாணத்தை பலப்படுத்தினார். இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையில் சகல இன அமைச்சர்களும் ஒன்றினைத்து கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் தொடக்கம் புல்மோட்டை வரை 17 புதிய பாலங்கள் கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் தலைமையிலான கிழக்கு மாகாண சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனினால் கடந்த 30 ஆண்டு காலத்தில் ஒரு சிறிய பாலத்தினையாவது கட்ட முடிந்ததா? ஆனால் முதலமைச்சர் 17
பாலத்தினை நிர்மாணித்துள்ளார்.
சம்பந்தன் மற்றும் ஆனந்த சங்கரி ஆகியோரின் உயிர்களுக்கு இலங்கை படையினர் தான் பாதுகாப்பு வழங்கி பாதுகாத்தனர் என்பதை மறந்து விடக்கூடாது. ஜனாதிபதியின் விருப்பம் இந்த நாட்டில் இன மத வேறு பாடின்றி நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதாகும்.
இலங்கையின் தேசிய பொருளாதாரத்திற்கு இலங்கையிலுள்ள மாகாணங்களில் கிழக்கு மாகாணம் முதன்மையான பங்களிப்பை வழங்கி வருகின்றது. இன்று 30 ஆண்டுகளின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்கள் பாரிய அபிவிருத்தி கான தொடங்கியுள்ளது. விவசாயம், கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், பாதை, மீன்பிடித்துறை மற்றும் நீர்ப்பாசனம் என சகல துறைகளிலும் இன்று அபிவிருத்தி கண்டுவருகின்றன.
யுத்த காலத்தில் தங்களது குழந்தைகளை லன்னடனிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்க வைத்துவிட்டு அங்கிருந்தவர்கள் தேர்தல் வரும் போது இங்கு வருகின்றனர். அவர்களின் பிள்ளைகள் இங்குள்ள பாடசாலைக்கு செல்வது கிடையாது. அவர்களுக்கு தேவை பிரச்சினை இருக்க வேண்டும். இங்கு எந்தவித அபிவிருத்தியும் நடக்கக் கூடாது என்பதே அவர்களின் விருப்பமாகும். இந்த செய்தியை கிராமங்கலில் இருந்து இங்கு வந்துள்ள மக்கள் உங்கள் கிராமங்களுக்கு போய் சொல்லுங்கள்" என்றார்.
4 minute ago
46 minute ago
46 minute ago
2 hours ago
vigtha Sunday, 18 March 2012 10:31 PM
இது என்ன புது கணக்கு?
Reply : 0 0
sarithan Sunday, 18 March 2012 11:42 PM
தலைவா, நீங்கள் சொல்லுவது எல்லோருக்குமா அல்லது ஒரு சிலருக்கு மட்டுமா? நீங்களும்தான் உணர்ச்சி வசனம் பேசுகிறீர்கள்.
Reply : 0 0
ram Sunday, 18 March 2012 11:53 PM
நீங்கள் எங்கே இருந்தீர்கள்? மறந்து விட்டதா.
Reply : 0 0
iya Monday, 19 March 2012 12:01 AM
இனவாதம் பேசும் உங்கள் கட்சி அமைச்சர்களுக்கு?
Reply : 0 0
nathan Monday, 19 March 2012 01:01 AM
ஒரு அமைச்சருக்கு உரிய பேச்சாக தெரியவில்லையே ........... காலம்தான் பதில் சொல்லும் ....
Reply : 0 0
suresh Monday, 19 March 2012 02:58 AM
இது நியாயம். இந்த நக்கல் நையாண்டி எல்லாம் ஆருக்கு ....
Reply : 0 0
Abdur Rahman Abdullah Monday, 19 March 2012 09:09 AM
சொல்வதற்கு ஒன்றும் இல்லை. சொல்லப்போனால் உங்கள் ஆட்ச்சியில் எங்கள் சோக கதைதான் சொல்லவேண்டும்.
Reply : 0 0
nifras Monday, 19 March 2012 05:18 PM
இந்த பேச்சு உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா ......
Reply : 0 0
karthigeyan Monday, 19 March 2012 06:45 PM
சம்பந்தர் பாலம் கட்ட நாடாளுமன்றம் செல்லவில்லை. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பாலம் அமைக்கவே புறப்பட்டவர். பிள்ளையானல் வேறு என்னைய்யா செய்யமுடியும்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
46 minute ago
46 minute ago
2 hours ago