2026 மே 06, புதன்கிழமை

'பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக பெற்றோர் வறுமையை காரணம் காட்ட தேவையயில்லை'

Kogilavani   / 2012 மார்ச் 22 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


பிள்ளைகளை கல்வியில் சிறந்தவர்களாக உறுவாக்குவதற்கு பெற்றோர்கள் வறுமையை ஒரு காரணமாகக் கொள்ளத் தேவையில்லை. வறுமையை நினைத்து தங்களது பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குவதில் தடையாக இருப்பது தனது பிள்ளைக்கு பெற்றோர்கள் செய்யும் துரோகமாகும் என கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.முபாறக் தெரிவித்தார்.

வாழைச்சேனை சிறுவர் நன்நடத்தை பிரிவின் கீழ் உள்ள பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை பிற்பகல் வாழைச்சேனை சிறுவர் நன்நடத்தை காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது நாட்டில் அரசாங்கத்தின் இலவசக் கல்வித் திட்டத்தினூடாக கல்வியைத் தொடர்வதற்கான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. அத்திட்டம் எமக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகும்.

உலகத்தில் சிறந்து விளங்கிய ஒவ்வொருவரினதும் வரலாற்றினை எடுத்துப் பார்ப்போமேயானால் அவர்கள் மிக வறுமையின் கீழ் வாழ்ந்து பெற்றோரின் முயற்சியால்தான் முன்னோக்கி வந்துள்ளார்கள். அவர்களது பெற்றோர்கள் கல்விக்கு வறுமையை காரணம் காட்டவில்லை அதனால்தான் அவர்களால் சிறந்து விளங்க முடிந்தது.

தங்களது பிள்ளைகளைகளுக்கு கல்வியை வழங்கும் போது கல்வியுடன் சேர்த்து நல்லொழுக்கத்தையும் வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் பெற்றோர்கள் மீது அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள. இன்று அநேகமானோர் படித்து பட்டம் பெற்றுள்ளார்கள்.

தங்களை கஷ்டப்பட்டு வளர்த்த பெற்றோர்களை பெற்றோர்கள் என்று சொல்வதற்கு வெக்கப்படும் பிள்ளைகளால்தான் முதியோர் இல்லம் உறுவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் எமது நாட்டில் முதியோர் இல்லங்கள்; இல்லாமல் ஆக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

சிறுவர் நன்நடத்தை அலுவலகத்தின் வாழைச்சேனை பொறுப்பாளர் எம்.எச்.எம்.நயிமுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யுனிசெப்   நிறுவனத்தின் அனுசரனையில் ஒரு மாணவருக்கு பத்தாயிரம் ரூபா வீதம் இருபத்தைந்து மாணர்களுக்கான காசோலைகள் அவர்களது பெற்றோர்களிடம்  வழங்கப்பட்டன.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .