2026 மே 06, புதன்கிழமை

வாகரையில் வெடிபொருட்கள் மீட்பு

A.P.Mathan   / 2012 மார்ச் 23 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.அனுருத்தன்)


மட்டக்களப்பு – வாகரை, கட்டுமுறிவு பிரதேச காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ஓரு தொகுதி வெடிப்பொருட்களை வாகரை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை மீட்டுள்ளனர்.

இப்பிரதேசத்தில் கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளின் முகாம் இருந்ததாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

இங்கு ஒரு தொகுதி மிதி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் 1999ஆம் ஆண்டு இவை விடுதலைப் புலியினரால் தயாரிக்கப்பட்டவையென குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த ரகசிய தகவலொன்றையடுத்து இவ்வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .