2026 மே 06, புதன்கிழமை

கோட்டைக்கல்லாறு பகுதியில் பாரிய அனர்த்த முன்னெச்சரிக்கை நிகழ்வு

A.P.Mathan   / 2012 மார்ச் 23 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாத்து - பாதுகாப்பான வாழ்வை ஏற்படுத்தும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட்டின் சமூக மட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும் இணைந்து இந்த செயற்றிட்டத்தை மேற்கொண்டுவருகின்றன.

அனர்த்த முகாமைத்து அமைச்சின் ஆலோசனையின் பேரில் இயற்கை அனர்த்தத்தினால் மிகவும் பாதிக்கப்படும் பகுதியாக அடையாளம் காணப்பட்ட களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட்டின் இயக்குநர் கிறைட்டன் அவுட்ஸ்கோன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் செல்வி கே.நவரூபரஞ்சினி, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.சி.ஆரியரத்தின, மட்டக்களப்பு 230ஆம் படையணியின் கட்டளை அதிகாரி ரி.டபிள்யு.முகாம்தரகே, களுவாஞ்சிகுடி பிரதேச இராணுவ அதிகாரி கொல்வின் அல்வீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் சுனாமி மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது செயற்படவேண்டிய விதம் தொடர்பில் அனர்த்த முகாமைத்து நிலையத்தினரால் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அத்துடன் அனர்த்தங்களின்போது பொதுமக்கள் பாதிக்கப்படும்போது அங்கு மேற்கொள்ளவேண்டிய மீட்பு மற்றும் முதலுதவி பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

இதன்போது இயற்கை அனர்த்தங்களின்போது பொதுமக்கள் செயற்படவேண்டிய விதம் தொடர்பில் அதிதிகளால் விளக்கவுரை செய்யப்பட்டதுடன் முதலுதவிக் குழுக்கள் நிறுவப்பட்டு அவர்களுக்கான முதலுதவிப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
















  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .