2026 மே 06, புதன்கிழமை

காசநோய் விழிப்புணர் நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 25 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

உலக காசநோயாளர் தினத்தையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையில் காசநோய் தொடர்பான விழிப்புணர் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

காசநோய் தொடர்பான விழிப்புணர்வு உரையாற்றப்பட்டதுடன், 100 சிறைக்கைதிகளுக்கு காசநோய் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டன.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் ஏ.கித்சிறி பண்டார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு காசநோய் வைத்திய தடுப்பு அதிகாரி டாக்டர் திருமதி மேலகா ரவிச்சந்திரன், உதவி ஜெயிலர் எஸ்.மோகன், சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர் எஸ்சிறினீவாசன், சுகாதாரக்கல்வி அதிகாரி எம்.எம்.புகாரி, சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .