2026 மே 06, புதன்கிழமை

சித்தாண்டி புதிய வீதி திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 26 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி விநாயகர் கிராமத்தில் புனரமைக்கப்பட்ட சித்தாண்டி புதிய வீதி நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண முதல்வரின் பணிப்புரையின் கீழ் புனரமைக்கப்பட்ட இவ்வீதியை திறந்துவைத்து மக்களிடம் கையளிக்கும் வைபவம் சித்தாண்டி பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது.

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் வினோத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதல்வரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன்,  கட்சியின் பொருளாளர் ஆறுமுகம் தேவராசா, கட்சியின் முக்கியஸ்தர் அருண்,  செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது  மாவடிவேம்பு கிராமத்தில் மணல் வீதிகளை அமைத்தல், மின்சாரம் வழங்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட செயற்றிட்ட வேண்டுகோள் முதல்வரிடம் கையளிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் தமது குறைகளையும் முதல்வரிடம் மனுக்களாக சமர்ப்பித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .