2026 மே 06, புதன்கிழமை

காத்தான்குடி வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 26 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டம்  அவ்வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் அதன் அபிவிருத்தி தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டன.

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் பி.தேவராஜ், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் எம்.சதுர்முகம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட்,  சுகாதார அதிகாரிகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள்,  வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .