2026 மே 06, புதன்கிழமை

ஆற்று மண் விற்பனையில் ஈடுபடும் டிரக்டர் வண்டி உரிமையாளர் கவனயீர்ப்பு போராட்டம்

Super User   / 2012 மார்ச் 27 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார், சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆற்று மண் ஏற்றி விற்பனையில் ஈடுபட்டு வரும் டிரக்டர் வண்டி உரிமையாளர்கள் நலன்புரி சங்கத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி பிள்ளையாரடியில் இருந்து மட்டக்களப்பு வரை கவனயீர்ப்பு வாகன பேரணியில் இன்று காலை ஈடுபட்டதுடன் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஐரினை அதிகாரிகளிடம் கையளித்தனர்.

குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஐரினை மட்டக்களப்ப உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலம் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோரிடம் கையளித்தனர்.

சட்ட ரீதியாக அனுமதிப் பத்திரம் பெற்று மண் ஏற்றும் எங்களை, பொலிஸார் நாளாந்தம் பொய்க் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வழக்கு தாக்கல் செய்கின்றனர். இதனால் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு தீர்வினை பெற்றுத் தரும்படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .