2026 மே 06, புதன்கிழமை

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஹாறூன் இராஜினாமா

Super User   / 2012 மார்ச் 29 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஏ.ஜி.எம்.ஹாறூன் நகர சபை உறுப்பினர் பதவியை நேற்று புதன்கிழமை இராஜினாமா செய்துள்ளார்.

காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உறுப்பினரான ஹாறூன் இயக்கத்தின் மீளழைத்தல் திட்டத்தின் கீழ் தனது இராஜினாமா கடிதத்தை மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு நேற்று புதன்கிழமை அனுப்பிவைத்துள்ளார்.

இதேவேளை, குறித்த வெற்றிடத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க உறுப்பினரான அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபில்(நளீமி) நியமிக்கப்பட்டுள்ளதாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் (நளீமி) தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபை தேர்தலில் சுயேட்சை குழுவாக போட்டியிட்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இரண்டு உறுப்பினர்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .