2026 மே 06, புதன்கிழமை

காத்தான்குடியில் இளைஞர் வீட்டு திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Menaka Mookandi   / 2012 மார்ச் 30 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இளைஞர் வீட்டுத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் வீட்டினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை புதிய காத்தான்குடி றிஸ்வி நகர் கிராமத்தில் நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் காத்தான்குடி பிரதேச இளைஞர் செவைகள் உத்தியோகத்தர் எம்.றம்சி தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.ஜி.ஏ.கபூர் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், உதவி பிரதேச செயலாளர் திருமதி எஸ்.வில்வரட்னம், மாவட்ட அளைஞர் செவை உத்தியோகத்தர் கலாராணி, காத்தான்குடி இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.நிப்றாஸ் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரு பிரதேச செயலாளர் பிரிவுக்கு ஒரு வீடு எனும் திட்டத்தின் கீழ் 14 வீடுகள் நிர்மாணிக்கப்படவள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .