2026 மே 06, புதன்கிழமை

கல்குடா தொகுதியில் யூத் வீடமைப்பு திட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Menaka Mookandi   / 2012 மார்ச் 30 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


இளைஞர் சேவைகள் மன்றத்தினால் செயல் படுத்தப்படும் யூத் வீடமைப்புத் திட்டம் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் இடம்பெற்றதற்கமைய கல்குடாத் தொகுதியில் வாழைச்சேனை மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இடம்பெற்றன.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கான வீட்டுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு பிறைந்துரைச்சேனை கிராம சேவகர் பிரிவில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரி ஏ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்றபோது பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், வாழைச்சேனை பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் அதிகாரி யூ.எல்.எம்.இனாமுல்லாஹ், வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சகாப்தீன் ஆகியோரும் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கான வீட்டுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு கொண்டயன்கேணி கிராம சேவகர் பிரிவில் வாழைச்சேனை பிரதேச செயலக இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரி எஸ்.அருளானந்தம் தலைமையில் இடம் பெற்றபோது பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.றஹீம், ஆகியோரும் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு பயனாளிக்கும் இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் மூலம் ஒரு இலட்சத்தி இருபத்தையாயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .