2026 மே 06, புதன்கிழமை

மாவிலங்கு துறையில் பொலிஸ் நடமாடும் சேவை

Kogilavani   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேசத்துக்குட்பட்ட யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நன்மை கருதி மாவிலங்குதுறையில் பொலிஸ் நடமாடும் சேவையொன்று நேற்று முன்தினம் சனிக்கிழமை  நடத்தப்பட்டது.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவுடன் ஆரையம்பதி பிரதேச செயலகம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை என்பன இணைந்து இந்த நடமாடும் சேவையினை மேற்கொண்டன.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன தலைமையில் இடம்பெற்ற நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன பிரதம அதிதியாகவும் ஆரையம்பதி பிரதேச சபையின் உறுப்பினர் கந்தசாமி, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவின் பொறுப்பதிகாரி டிக்கிரி பண்டார உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந் நடமாடும் சேவையின்போது பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், திருமணச்சான்றிதழ், இறப்புச்சான்றிதழ்கள் பெறுவதற்கான நடவடிக்கைகள், அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், பொலிஸ் முறைப்பாடுகள், சிவில் நல்லிணக்க சபை என்பனவற்றின் செயற்பாடுகள் இடம்பெற்றன.

அத்துடன் புதுக்குடியிருப்பு ஆயுர்வேத மருந்தகத்தின் மருத்துவக்குழு மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ குழுவினரும் இணைந்து இலவச வைத்திய முகாம்களையும் நடத்தினர்.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .