2026 மே 05, செவ்வாய்க்கிழமை

வாழைச்சேனையில் பொலிஸ் நடமாடும் சேவை

Kogilavani   / 2012 ஏப்ரல் 21 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

வாழைச்சேனை பொலிஸின் ஏற்பாட்டில் பொலிஸ் நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் சுங்காங்கேணி அரசினர் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது.

சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பாளர் யூ.எல்.இமானுல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவீர, மதப் பெரியார்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, பிறப்ப இறப்பு சான்றிதழ்களை பதிவுசெய்துகொள்ளல், திருமணப் பதிவு, பொலிஸ் முறைப்பாடு பிரதி வழங்கள், மிதி வெடி மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விளக்கப்படுத்தல் , சுகாதார திணைக்களத்தின் சுற்றுச் சூழல் தொடர்பான விளக்கம் என்பன இடம்பெற்றன.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .