2026 மே 06, புதன்கிழமை

மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் நினைவுதினம்

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 27 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

தந்தை செல்வாவின் 35ஆவது நினைவுதினம் 30 வருடங்களுக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சுமந்திரன், பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, மதத்தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள்  கலந்துகொண்டனர்.

நோர்வே தமிழ்ச் சங்கம் மற்றும் சுவிஸ் அன்புத்துளிர் அமைப்பினர் வழங்கிய உதவிப்பொருட்கள் மட்டக்களப்பில்  வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பெண்களுக்கான வாழ்வாதார மேம்படுத்த உதவிகளும் வழங்கப்பட்டன.

இதேவேளை, தந்தை செல்வாவின் நினைவுதினம் அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் ஆலையடிவேம்பு தவிசாளர் க.இரத்தினவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தந்தை செல்வாவின் வாழ்க்கையும் தாயக அரசியல் பார்வையும் என்ற தலைப்பில் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான கி.துரைராஜசிங்கத்தின் உரையும்  இலங்கை அரசியலில் ஜெனிவாத் தீர்மானம் தாக்கம் செலுத்துமா? என்ற தலைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.சுமந்திரனின் உரையும் நடைபெற்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .