2026 மே 05, செவ்வாய்க்கிழமை

யுத்தசூழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி

Suganthini Ratnam   / 2012 மே 02 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தசூழல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத் திட்டத்திற்காக லண்டன் அகிலன் பவுன்டேஸன் நிறுவனத்தினால் நிதியுதவிகள் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

ஆரைம்பதியில் லண்டன் பவுன்டேஸன் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், லண்டன் அகிலன் பவுன்டேசன் ஸ்தாபகர் கோபால கிருஸ்ணன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும்  15 குடும்பங்களின் தலைமை அங்கத்தவர்கள்  தெரிவுசெய்யப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 25,000 ரூபா வீதம் நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

சிறுவியாபாரங்கள், சிறுகைத்தொழில்கள் மேற்கொள்வதன் மூலம் தமது குடும்பத்தினை பொருளாதார ரீதியில் கொண்டு செல்ல உறுதுணையாக அமையும் என லண்டன் பவுன்டேஸன் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மகேந்திரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .