2026 மே 05, செவ்வாய்க்கிழமை

தென்னிலங்கையிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மதத்தலைவர்கள் விஜயம்

Super User   / 2012 மே 23 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


தென்னிலங்கையிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த மதத்தலைவர்களுக்கான ஒன்றுகூடல்  நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.

சர்வோதயத்தின் சாந்தி சேனா நிறுவனத்தினால் யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் மேற்கொண்டு வரும் மதங்களுக்கிடையிலான பரிமாற்றல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மத தலைவர்களின் ஒன்று கூடல் இடம்பெற்றது.

சர்வோதய அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் இ.எல்.ஏ.கரீம் தலைமையில் நடைபெற்ற ஒன்றுகூடலின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி சுதத் திலக், சாந்திசேனா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது புதிய மாவட்ட செயலாளராக பதவியேற்றுள்ள பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்கப்பட்டதுடன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அத்தோடு சர்வோதயத்தினால் வூஸ்க் நிறுவனத்தின் அனுசரணையுடன் தையல் பயிற்சியை முடித்தவர்களுக்கான சுய தொழிலுக்கான தையல் இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டன.

மதங்களுக்கிடையிலான ஒத்துழைப்பின் ஊடாக சமூக அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டலை ஏற்படுத்துவதற்கான இந்த பரிமாற்றல் நிகழ்ச்சித் திட்டத்திற்காக 30 மதத்தலைவர்கள் தென்னிலங்கையிலிருந்து மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .