2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

கோப்பாவெளியில் காணிகள் வழங்குவதற்கான நடமாடும் சேவை

Kogilavani   / 2012 ஜூன் 07 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதி- கோப்பவெளியில் நீண்டகாலமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு காணி வழங்குவதற்கான நடமாடும் சேவையொன்று செவ்வாய்க்கிழமை முதல் கோப்பாவெளி சர்வோதய சமூக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இவ் நடமாடும் வேவையில் நூற்றுக்கணக்கான மக்கள் ஏற்கனவே தாங்கள் விண்ணப்பித்த படிவத்துக்கமைவாக விபரங்களை வழங்கினர்.
இதில் விவசாயக்காணிகள் ஒரு ஏக்கர் அல்லது மேட்டு நிலக்காணி (குடியிருப்பு) அரை ஏக்கரும் வழங்கப்படவுள்ளன.

கடந்த யுத்தகாலத்தில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பின்தங்கிய பிரதேசங்களில் கோப்பாவெளியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .