2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

கோரளைப்பற்றில் சமூக சேவைகள் திணைக்கள புதிய கட்டிடம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 08 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் அமையப் பெறவுள்ள சமூக சேவைகள் திணைக்கள கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் பதினைந்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமையப் பெறும் இக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சரின் இணைப்பாளர் எம்.கே.முஹைதீன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .