2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

மட்டு. வைத்தியசாலை உத்தியோகஸ்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 08 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் அரச தாதியர் உத்தியோகஸ்தர்கள் மற்றும் நிறைவுகான் வைத்திய உத்தியோகஸ்தர்கள், துணை மருத்துவ உத்தியோகத்தர்கள் ஆகியோர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து  இன்று நண்பகல் கவனயீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

உதவிக்கொடுப்பனவாக 5000ரூபா வழங்கப்படல் வேண்டும், சுகாதார அமைச்சினால் வழங்கப்படும்  ஊழியர்களுக்கான கொடுப்பனவு விடயத்தில் சகல ஊழியர்களுக்கும் கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறச்செய்ய வேண்டும்.

தாதியர் மற்றும் துணை மருத்துவர்கள் நிறைவுகான் வைத்திய உத்தியோகத்தர்களை மாகாண சபை உள்ளீர்க்கச் செய்யும் தீர்மானம் உடனடியாக ரத்துச் செய்யப்படல் வேண்டும், தொலைபேசிக் கட்டணமாக 4000 ரூபா வழங்கப்படல் வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .